இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து

சென்னை; இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் இறுதி கட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ,திமுக ,சமாஜ்வாதி ,தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சித் தலைவர்களும் இக்கூற்றத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் முதலமைச்சரமான மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகும் நிலையில் இந்தியா கூட்டணி ஜூன் 1ல் ஆலோசனை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: