ஒன்றிய அரசை கண்டித்து கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

சென்னை: கிராமிய தபால் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி, பென்சன் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். 2018ம் ஆண்டில் கமலேஷ்சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பணப்பலத்துடன் கூடிய மூன்று கட்ட பதவி உயர்வு, 12, 24, 36 வருட பணிக்கு வழங்க வேண்டும். 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக்கொடை ரூ.5 லட்சம், குரூப் இன்சூரன்ஸ் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு போன்றவை வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனே நிறைவேற்றித் தர வலியுறுத்தி அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கிராமிய தபால் அலுவலகங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரம் கிராமிய தபால் ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர். தமிழகத்தில் 21 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். போராட்டம் காரணமாக மணியார்டர் பட்டுவாடா, தபால் பட்டுவாடா, இன்சூரன்ஸ் உள்ளிட்ட கிராமிய அஞ்சலக சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

The post ஒன்றிய அரசை கண்டித்து கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Related Stories: