ஜி.ஹெச் கட்டுமான சிலாப் இடிந்து ஒருவர் பலி

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு பச்சிளம் குழந்தை கண்காணிப்பு மையம் (சீமாங் சென்டர்) உள்ளது. சீமாங் சென்டரை விரிவுபடுத்த ஒன்றிய அரசின் தேசிய சுகாதார குழு முடிவு செய்து ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கர்ப்பிணிகளுக்கான பிரசவ அறுவை சிகிச்சை அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட கடந்த 2023ல் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பூச்சுப் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டிடத்தின் போர்டிகோ மேல்புறம் முகப்பு பகுதியில் 2 தூண்களுடன் கூடிய சிலாப் அமைக்கப்பட்டு அதன் கீழ் பகுதியில் கட்டிட பூச்சு பணியில் மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் (40), முனிஸ் (30), ரத்தினவேல் (42) ஆகிய 3 பேர் நேற்று ஈடுபட்டிருந்தனர். திடீரென முகப்பு சிலாப் இடிந்து 3 பேரும் சிக்கினர். இதில் நம்பிராஜன் இறந்தார். முனீஸ், ரத்தினவேல் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

The post ஜி.ஹெச் கட்டுமான சிலாப் இடிந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: