ஆனால், ஜயப்பமார்கள் இருமுடியை தலையில் சுமந்தவுடன், அவர்களை சாமி ஐயப்பனாகவே பார்ப்பதால், பெற்றோர் கூட பிள்ளைகள் காலில் விழுந்து வணங்குகின்ற முறை இதில் மட்டுமே உண்டு. மனித நிலையிலிருந்து ஒருவரை தெய்வ நிலைக்கு மாற்றக் கூடியதாக மகத்துவமான தனித்துவ தத்துவமாக அமைந்துள்ளது ஐயப்பன் விரத நெறிமுறைகள். வழிபாடுகளில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் சூழ்நிலையில் நீயும், நானும் ஒன்று என ஐயப்பன் வழி வகுத்துள்ளார். முக்கியமானதாக ஐயப்பன் வழிபாட்டில் சமத்துவம் மற்றும் சமூக நீதி தழைத்தோங்கி இருப்பதை காண முடிகிறது.
ஒவ்வொரு தெய்வங்களுக்கும், பல பெயர்களுடன் கோயில்கள் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு, சிவபெருமானுக்கு பஞ்ச பூத தலங்கள், பெருமாளுக்கு 108 திவ்ய தேச தலங்கள், முருகனுக்கு ஆறு படைகள் இருப்பது போன்று ஐயப்பனுக்கும் 8 அவதாரங்களும், 8 உருவங்களும் உண்டு. ஐயப்பன் அவதாரம் என்பது, சாபத்தால் மகிஷியாக மாறிய, மூன்று தேவிகளின் உருவமான மாளிகைபுரத்து அம்மன் என அழைக்கப்படும் மஞ்ச மாதாவிற்கு,
மும்மூர்த்திகளின் (சிவன், விஷ்ணு, பிரம்மன்) ஆணைப்படி சாபவிமோசனம் அளித்து, தர்மத்தை நிலைநாட்ட ஹரிஹர புத்திரனாக மனித அவதாரம் எடுத்து சபரிமலையில் தவக்கோலத்தில் இருக்கும் ஐயப்பன், சாஸ்தா அவதாரங்களில் 8வது அவதாரமாக அவதரித்தார். அந்தவகையில் முதலில் சாஸ்தா என்பவர் யார் என தெரிந்துகொண்டால் தான் ஐயப்பன் அவதாரத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்…
The post ஐயப்பனின் 8 அவதாரம் appeared first on Dinakaran.