குங்பூ மாஸ்டர் சேகரின் நினைவு தினத்தில் மணிமண்டபம் திறப்பு: மல்லை சத்யா பங்கேற்பு

மாமல்லபுரம்: மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலையின் கிராண்ட் மாஸ்டர் சேகரின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலையில், போதி தர்மரின் நிகழ்கால அடையாளமாக வாழ்ந்து மறைந்த கிராண்ட் மாஸ்டர் சேகரின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மஞ்சூரியா தற்காப்பு கலையின் தலைவரும், மதிமுக துணை பொது செயலாளருமான மல்லை சத்யா தலைமை தாங்கினார்.

மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலையின் தேசிய செயலாளர் அசோக்குமார் முன்னிலைவகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மலேசியா நாட்டின் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலக தொடர்பு தலைவர் ராஜேந்திரன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்து, நினைவு சுடரை ஏற்றி வைத்தனர்.

இதனைதொடர்ந்து, மறைந்த மாஸ்டர் சேகர் வாங்கிய பட்டங்கள், தலைமை நடுவராக செயல்பட்ட போட்டிகள், சமுதாய பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்கள். மேலும், கால்பந்தாட்ட பயிற்சியாளர் கோவை போத்தனுர் ராஜகோபாலுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி உதவி செய்தனர். இதையடுத்து, மஞ்சூரியா குங்ஃபூ சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற 200 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

The post குங்பூ மாஸ்டர் சேகரின் நினைவு தினத்தில் மணிமண்டபம் திறப்பு: மல்லை சத்யா பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: