நன்றி குங்குமம் டாக்டர்
பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து குறைவாகவே காணப்படுகிறது. எனவே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து, வயதிற்கேற்ற உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் விளையாட்டுத்தனமாகதான் இருப்பார்கள். எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை, அவர்களுடன் விளையாடிக் கொண்டே ஊட்ட முயற்சிப்பது மிக சிறந்த வழியாகும். குறைந்தது 1 மணி நேரமாவது உணவு தர செலவிடவேண்டும்.
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க எவ்வகையான உணவு கொடுக்கலாம் என்பதை பற்றி காணலாம்.வால்நட் – பொதுவாக குழந்தைகளுக்கு மூளை செயல்பாடு எப்போதும் சுறுசுறுப்பாக தான் இருக்கும். சில முக்கியமான உணவுகள் மூளையின் போதுமான வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது. அந்தவகையில், வால்நட் கொடுப்பது நல்லது. இது மூளையைப் போன்றே தோற்றமளிப்பதால் மூளை வளர்ச்சிக்கும் உகந்ததாக உள்ளது. வால்நட்டில் ஆன்டி- ஆக்ஸிடன்ட் உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு மூளை அல்சைமர் நோய்களைத் வராமல் தடுக்கிறது. தினமும் 3-5 வால்நட் கொடுத்தாலே போதுமானது.
பாதாம் – இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமை காலை அல்லது மாலையில் கொடுக்கலாம், இரவில் கொடுக்கக்கூடாது. இரவில் கொடுப்பது செரிமான கோளாறு ஏற்படலாம். தினமும் 5 முதல் 10 பாதாம் வரை கொடுக்கவேண்டும், அதிக அளவு கொடுத்தால் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். முட்டை- இதில் ஒமேகா 3 கொலஸ்ட்ரால் அமிலங்கள் மற்றும் கொலின் ஊட்டச்சத்து உள்ளது. தினமும் ஒரு வேகவைத்த முட்டையை கொடுக்கலாம். குழந்தைகள் ஆக்டிவ்வாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும். மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்.
மீன் – வைட்டமின் டி மற்றும் பி12 கால்சியம், பாஸ்பரஸ் மீனில் நிறைந்துள்ளன. எனவே இது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு நல்லது மற்றும் நினைவக சக்தியை அதிகரிக்கிறது. எந்த வகையான மீனாக இருந்தாலும் கொடுக்கலாம், ஆனால் முள் அதிகளவு உள்ள மீனை குழந்தைகளுக்கு பார்த்து கொடுக்க வேண்டும். வாரம் இருமுறை மீன் கொடுக்கலாம், இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தி மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
பால் – வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. இதில் கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நல்ல ஞாபக சக்தியை அளிக்கிறது. பாலில் உள்ள கால்சியம் உடலை பராமரிக்கும். தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வரும்.
தொகுப்பு: ரிஷி
The post குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க… appeared first on Dinakaran.