* மஞ்சள் தூளை தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறிவிடும்.
* நாவல் பழத்தை சுத்தம் செய்து, அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
* சித்தரத்தை இடித்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர தொண்டைப்புண் தொலைவில் பறந்து விடும்.
*ஒற்றைத்தலைவலி தாங்க முடியாத தலைவலிகளுக்கு பூண்டை அரைத்து பற்று போடலாம்.
* அருகம்புல்லை நீர்விட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் பால், சர்க்கரை கலந்து குடித்து வர சிறுநீர்ப்பை சம்பந்தமான நோய்கள் தீரும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை தண்ணீர் கலந்து, தினமும் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் காணாமல் போய்விடும்.
* மாதுளம் பழச்சாற்றை தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் குடித்து வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.
* அத்திப்பழத்தை காலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.
* கீழாநெல்லி வேர் சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் தலைக்குத் தடவி வர முடி வளரும்.
* நன்னாரி வேரை பொடியாக்கி தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
* இஞ்சிச்சாறை கொதிக்க வைத்து, அதே அளவு தேன் ஊற்றி ஆற வைத்து தினசரி உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் குறையத் தொடங்கும்.
* மருதாணி இலையை தயிர்விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
* பாதாம் பொடியை சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
* கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் நன்கு அரைத்து அம்மை தழும்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் தழும்பு மறையும்.
* கஸ்தூரி மஞ்சள், பயத்த மாவு, தயிருடன் கலந்து முகத்தில் பத்து நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
* வெந்தயத்தை ஊற வைத்து, நெல்லிக்காய் சேர்த்து அரைத்து, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்துக் குளித்துவர பொடுகு ‘பொட்’டென்று ஓடிப்போய் விடும்.
* ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.
* பாலுடன் மஞ்சள் போட்டுக் காய்ச்சி காலை, மாலை தினமும் குடிக்க தொண்டை வலி போய்விடும்.
* சிறிய வெங்காயத்தை மைய அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்து வர உடம்பு குளிர்ச்சி பெறும். பொடுகும் காணாமல் போய்விடும்.
தொகுப்பு: ஆர்.உமா, ஈரோடு.
The post வாசகர் பகுதி – எளிய முறை வைத்தியம்! appeared first on Dinakaran.