ஐஸ்லாந்தின் தலைநகர் அருகே வெடித்துச் சிதறிய எரிமலை; நெருப்பு குழம்பை கொப்பளித்தபடி படர்கிறது..!!

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் எரிமலை வெடித்தது. ரெய்காவிக்கில் இருந்து 20 மைல் தொலைவில் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்து சிதறி, தீக்குழம்பை கக்கி வருகிறது. ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக வெடித்த இந்த எரிமலை, அந்நாட்டின் பெரிய விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள போதிலும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

The post ஐஸ்லாந்தின் தலைநகர் அருகே வெடித்துச் சிதறிய எரிமலை; நெருப்பு குழம்பை கொப்பளித்தபடி படர்கிறது..!! appeared first on Dinakaran.

Related Stories: