தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை..... நீட் பயிற்சி வகுப்பு நடத்தினால் அங்கீகாரம் ரத்து

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வந்த பிறகு, தமிழகத்தில் ஏராளமான நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உருவாகியுள்ளன. இவர்கள் இந்த பயிற்சிக்காக லட்சக்கணக்கில் பணமும் கட்டணமாக பெறுகின்றனர். அதே போன்று முக்கிய சில நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளும், தனியார் பயிற்சி மையங்களின் உதவியுடன் பள்ளிகளிலேயே நீட் பயிற்சி அளித்து வருகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பினை தமிழக அரசு தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து,  தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்கும் பொருட்டு, பள்ளிகளில் பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். நீட் தேர்வுக்கு பயிற்சி நடத்தக்கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறப்பு வகுப்புகள் எனக்கூறி தனியாக கட்டணம் வசூலிக்கவும் தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், இதனை மீறும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்திருந்தது. இதனை தமிழக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி செய்துள்ளார்.  

பள்ளி நாட்களில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க எம்.எல்.ஏ, தங்கம் தென்னரசுவின் புகாருக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அவர், தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும்,  சிபிஎஸ்இ பள்ளிகள் 3 ஆண்டுக்கு ஒருமுறை அரசிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: