கணவன்- மனைவி இடையே குடும்ப சண்டை அதிகரிக்க வெயிலும் ஒரு காரணமாம்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: வெயில் அதிகரிப்பது, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, குடும்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும், குடும்ப சண்டையை அதிகரிக்கும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்புற வெப்பநிலையும் அதிகரிக்கும் குடும்ப சண்டைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஜமா சைக்காட்டிரி மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆண்டின் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது, கணவன், மனைவி இடையேயான குடும்ப சண்டை 4.5 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 21ம் நூற்றாண்டின் இறுதியில், அதாவது 2090ம் ஆண்டில் 3 நாடுகளிலும் சராசரியாக 21 சதவீதம் குடும்ப வன்முறை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகபட்சமாக இந்தியாவில் 23.5 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சுமார் 8 ஆண்டுகளில் 1 லட்சத்து 95 ஆயிரம் பெண்களிடம் இருந்து தகவல்கள் சேரிக்கப்பட்டுள்ளன.

The post கணவன்- மனைவி இடையே குடும்ப சண்டை அதிகரிக்க வெயிலும் ஒரு காரணமாம்: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: