ஹோட்டல் லீ மெரிடியன் விவகாரம் எம்.கே.ராஜகோபாலன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஹோட்டல் லீ மெரிடியனை வாங்கும் விவகாரத்தில் எம்.கே.ராஜகோபாலன் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரபல தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமியின் அப்பு ஹோட்டல் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திடம் வியாபார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்று இருந்தது. அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் அப்பு ஹோட்டல் நிறுவனம் திவாலானதாக கருதி, சென்னை மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்களையும், கும்பகோனத்தில் உள்ள ரிவர்சைட் ஸ்பா மற்றும் ரிசார்ட்டையும் விற்று கடனை அடைக்க அனுமதிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதி நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

அவற்றை வாங்குவதற்கு எம்.ஜி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே. ராஜகோபாலன் குறிப்பிட்டிருந்த ரூ.423 கோடி ரூபாய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் அப்பு ஹோட்டல்ஸ் சொத்துக்களை எம்.கே.ராஜகோபாலனுக்கு மாற்றும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரியும் எம்.கே.ராஜகோபாலன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா மற்றும் விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து,’முந்தைய உத்தரவில் எந்தவித மறுஆய்வும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து, எம்.கே.ராஜகோபாலன் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post ஹோட்டல் லீ மெரிடியன் விவகாரம் எம்.கே.ராஜகோபாலன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: