ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

ஒசூர்: ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே ரூ.3,051 கோடி முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள ஆலை, மேலும் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

இதில் ஐ-போன்களை உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது தினசரி 92,000 செல்போன்கள் உற்பத்தியாகும் நிலையில் 2 லட்சம் செல்போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் இந்த தொழிற்சாலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் ஏறக்குறைய 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள ஆலை, மேலும் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன்முலம் தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 80 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 29ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

The post ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: