அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்க ராமேஸ்வரம் வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

ராமேஸ்வரம்: அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக உள்துறை அமைச்சர் மதுரை வந்தடைந்தார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடை பயணம் மேற்கொள்கிறார். என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபயணத்தை அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் தமிழம் வந்துள்ளார். இந்த நிலையில், அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக உள்துறை அமைச்சர் மதுரை வந்தடைந்தார். விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவர், தமிழக பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அமித் ஷா மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். இன்னும் சிலமணி நேரத்தில் அண்ணாமலையின் நடைப்பயணத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.

The post அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்க ராமேஸ்வரம் வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா! appeared first on Dinakaran.

Related Stories: