மேல்சிகிச்சைகாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அந்த பெண்ணின் இதயம் திறம்பட ரத்தத்தை பம்ப் செய்வதில்லை என்பதையும் மற்றும் பெண்ணின் ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வுகளில் ரத்தக்கசிவு இருப்பதையும் சரிசெய்ய மருந்துகளின் மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அதில் முன்னேற்றம் ஏற்படாததால் டிஇஇஆர் (TEER) என அழைக்கப்படும் இதய ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வுகளுக்கான பழுதுநீக்கல் சிகிச்சையை செய்ய அப்போலோ மருத்துவர்கள் திட்டமிட்டனர்.
இதயத்தின் ஈரிதழ் (மிட்ரல்) வால்வு, முறையாக மூடாததால் ரத்தமானது பின்னோக்கி கசிவதை விளைவிக்கும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிறிய கிளிப்பை கதீட்டர் வழியாக எடுத்துச் சென்று வால்வுடன் இணைத்து, அது சரியாக மூடுவதற்கு இந்த மருத்துவ செயல்முறை உதவுகிறது. இதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்படுவதுடன், பாதிப்பு அறிகுறிகள் குறைக்கப்படும். இந்த மருத்துவ செயல்முறையின் இடர்கள் மற்றும் ஆதாயங்கள் குறித்து நோயாளியிடமும் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் விவாதித்த பிறகு ஒரே நேரத்தில் இரு வால்வுகளுக்குமான டிஇஇஆர் (TEER) மருத்துவ செயல்முறையை மருத்துவ நிபுணர்களின் குழுவினர் மேற்கொண்டனர்.
இந்த புதிய செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால், இப்பெண்ணின் உடல்நிலை கணிசமான முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக அப்போலோ மருத்துவர்மனை டாக்டர் சாய் சதீஷ் கூறியதாவது:
இந்தியாவில் முதன்முறையாக செய்யப்பட்டிருக்கும் இந்த இரட்டை வால்வு பழுதுபார்ப்பு சிகிச்சை, அதிக சிக்கலான நேர்வுகளையும், வெற்றிகரமாக கையாண்டு, நோயாளிகளுக்கான சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதில் மருத்துவ குழுவினரின் அபாரமான திறனை நேர்த்தியாக பிரதிபலிக்கிறது. இதற்கு முன்பு இருந்த பிரச்னைகளிலிருந்தும், பாதிப்பு அறிகுறிகளிலிருந்தும் விடுபட்டு, நோயாளி இயல்புநிலைக்கு திரும்பியிருப்பது அணுகுமுறையின் பயனளிக்கும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இதுபோன்ற அதிக சவாலான இதய பாதிப்பு பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு பயனளிக்கும் புதிய சிகிச்சை விருப்ப தேர்வுகளை இது முன்வைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
The post இதய செயலிழப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு இதய ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வு பழுதுநீக்கல் சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.