சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே, ஸ்பெஷல் டீம் போலீஸ் எனக்கூறி கடலூரைச் சேர்ந்த சேது என்பவரிடம் ரூ.12,000 வழிப்பறி செய்த மூவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி, ரம்ஜான் அலி மற்றும் இப்ராஹிம் மூவரும் அப்பகுதியில் தொடர்ந்து இதுபோல வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.