குஜராத் மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: மத்தியமேற்கு, ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றூம் காரைக்காள் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழை வெள்ளதால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post குஜராத் மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: