×

பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அப்போது போட்டித் தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், 2018ம் ஆண்டு ஜூலை 20ம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை அப்போதைய அரசு திணித்தது. ஒரே பணிக்கு தகுதித் தேர்வு, போட்டி தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது எப்படி சரியாக இருக்கும்? எனவே, ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி அரசாணை 149 மற்றும் அதன்படியாக போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,Tamil Nadu government ,Bamaka… ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...