அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தொல்லியல் ஆய்வு: தென்பெண்ணை ஆற்றுப்படுக்கையில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு!

கடலூர்: அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தொல்லியல் ஆய்வு செய்ததில் தென்பெண்ணை ஆற்றுப்படுக்கையில் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. கடலூர் மாவட்டம், உளுந்தாம்பட்டு பகுதி தென்பெண்ணை ஆற்றுப் படுகையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பழங்கால செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.பண்ருட்டியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் அரசுப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பண்ருட்டி வட்டம், உளுந்தாம்பட்டில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் பழங்கால 3 செம்பு நாணயங்களை கண்டெடுத்தனர்.

தென்பெண்ணை ஆற்றுப்படுக்கையில் மாணவர்கள் பழங்கால நாணயங்களை கண்டறிந்ததில் 2 நாணயங்கள் ராஜராஜன் பெயர் பொறித்த சோழர் காலத்தைச் சேர்ந்தவை. மற்றொன்று விஜயநகர பேரரசு கால நாணயம். சோழர் கால நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ’ என பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மற்றொருபுறம் கையில் மலர் ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன.

விஜயநகர பேரரசு கால நாணயத்தின் ஒருபுறம் தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீநீலகண்டா’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் காளை உருவமும், பிறையும் உள்ளன. தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் சங்க காலம் முதல் சோழர்காலம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன

The post அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தொல்லியல் ஆய்வு: தென்பெண்ணை ஆற்றுப்படுக்கையில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.

Related Stories: