தொடர்ந்து 24ம் தேதி சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920க்கும், 25ம் தேதி சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440க்கும், 26ம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.51,320க்கும் விற்கப்பட்டது. அதாவது, கடந்த 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை தங்கம் விலை சவரன் ரூ.3,920 குறைந்தது. இந்த அதிரடி விலைக் குறைவால் தங்க வியாபாரம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் விலையில் மாற்றம் இல்லை. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.51,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post தங்கம் விலையில் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்தது appeared first on Dinakaran.