சென்னை: பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு விஷமத்தனமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பொதுசிவில் சட்டம் வந்தால் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்கமுடியும் என மோடி பேசியுள்ள நிலையில் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முற்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அவர் கூறியுள்ளார்.
The post பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு விஷமத்தனமானது: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.