கேலோ இந்தியா போட்டியை காண பிரத்யேக அனுமதி சீட்டு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை காண்பதற்கு பிரத்யேக அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகிறது. இது குறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கை: 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் நாளை முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இடம்பெற உள்ளது. இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள், வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட அனுமதி சீட்டுகளை வழங்க தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவும் மற்றும் https://www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் போட்டி நடைபெறும் மாவட்டம், விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும் போது பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டினை அலைபேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும்.

The post கேலோ இந்தியா போட்டியை காண பிரத்யேக அனுமதி சீட்டு appeared first on Dinakaran.

Related Stories: