×

ரூ.5 கோடி மோசடி செய்த நபர் கைது

ஆவடி: ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பகுதியை அசோக்குமார்(47) என்பவர் 18.07.2024ம் தேதி கொடுத்த புகார் மனு கூறியிருப்பதாவது: நான் கடந்த 66 வருடகாலமாக தனது மூதாதையர்கள் காலத்தில் இருந்து அசோக் தங்க மாளிகை என்ற பெயரில் தங்க நகை கடை வைத்து நடத்திவருகிறேன். எனது நண்பர் புருஷோத்தமன் மூலமாக நொளம்பூரை சேர்ந்த சண்முகம் என்பவர் 2008ம் ஆண்டு அறிமுகமானார்.

சண்முகம் என்பவர் களீஷ்வா என்ற பெயரில் வீடுகளுக்கு, நிறுவனங்களுக்கும் இன்டீரியர் வேலை செய்யும் நிறுவனத்தை அண்ணாநகரில் நடத்தி வந்தார். சண்முகம் கடந்த 2008ம் ஆண்டு முதல் அவர் என்னிடம் கைமாத்தாக கடன் வாங்கி திரும்பி கொடுத்து வந்துள்ளார். சண்முகம் 2016ம் ஆண்டு குளோபல் ஹெல்த் டூரிசம் என்ற நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் அதில் வெளிநாட்டு நோயாளிகளை
இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்றும் வரும் லாபத்தில் எனக்கு 40:60 என்ற முறையில் தருவதாக நம்பிக்கையாக பேசினார்.

என்னிடம் பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் பல்வேறு தவணைகளாக சண்முகத்திற்கு 26 லட்சமும், ரொக்கமாக 1.79 கோடியும் கொடுத்தேன். இதுவரை ரூ.5 கோடி வரை பணத்தை பெற்றுக்கொண்டு எவ்வித லாபத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நான் பணத்தை கேட்டபோது, அவர் விஜெலென்ஸில் வேலை செய்து வருவதாகவும் ஐடி ரெய்டு வந்து உன் கடையை காலி செய்து விடுவேன் என்று மிரட்டி மிரட்டுகிறார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை வாங்கித் தரவேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர், துணை ஆணையர் பி.பெருமாள் அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ரேகா தலைமையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், ரெட்ஹில்ஸ் புதுநகர் சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ரூ.5 கோடி மோசடி செய்த நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Ashokumar ,Ampathur Varadarajapuram ,Central Crime Branch ,Avadi Police Commission ,Ashok Thanga ,
× RELATED தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி வியாபாரி பரிதாப பலி