ரூ.182 கோடி மோசடியில் தப்பி ஓட்டம் 2 சென்னை தொழிலதிபர்கள் பொருளாதார குற்றவாளிகள்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் 2 சென்னை தொழிலதிபர்களை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் விளம்பர இயக்குனர்கள் சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம். இருவரும் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பான விசாரணையில் இவர்கள் இருவரும் திட்டமிடப்பட்ட குற்றங்களை செய்ததன் மூலமாக 186 கோடி ரூபாய் அளவுக்கு குற்ற வருவாய் ஈட்டியுள்ளதை அமலாக்கத்துறை கண்டறிந்தது.

இதிலிருந்து தங்களது துணை நிறுவனமான அமெரிக்காவில் உள்ள இசட்எஸ்எல்க்கு பணம் அனுப்புவது என்ற பெயரில் ரூ.58.12கோடி அளவுக்கு பணத்தை நாட்டிற்கு வெளியே கொண்டு சென்றுள்ளனர். மேலும் நிறுவன அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் வங்கி கடன்களை மோசடி செய்வதற்காக இரண்டு முதன்மை நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்களையும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமனுஜம் சேஷரத்னம் ஆகியோர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

The post ரூ.182 கோடி மோசடியில் தப்பி ஓட்டம் 2 சென்னை தொழிலதிபர்கள் பொருளாதார குற்றவாளிகள்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: