அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் செலவிடப்பணம் கூட திரும்ப கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை

கரூர்: அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் செலவிடப்பணம் கூட திரும்ப கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை, மூலனூர் முருங்கை என பல்வேறு வகையான முருங்கை வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றது.

தற்போது முருங்கை மரங்கள் பூ பூத்து, காய்கள் காய்த்து குலுங்குகின்றன. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கை காய்கள் ஒரு கிலோ ரூ. 100 என்ற அளவில் விற்பனை ஆனது ஆனால் தற்போது ஒரு கிலோ முருங்கை காய்கள் ரூ. 3 முதல் 10 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகின்றது. அதை போல் முருங்கை விதை கிலோ ரூ. 600 என்ற அளவில் விரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ. 200 மட்டுமே விற்கப்பட்டு வருவதாகவும் விவாசியிகள் வேதனை தெரிவித்தனர்.

எனவே நெல்லுக்கு வைத்திருப்பது போல முருங்கைக்கும் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் முருங்கை கன்று ஒன்று ரூ. 40 என்ற அளவில் வாங்கி நடப்படுவதாகவும் ஆனால் சாகுபடிக்கு செலவு செய்யும் விலை கூட முருங்கைக்கு கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வெளி மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அம் மாநிலங்களுக்கு முருங்கை அனுப்புவதும் குறைந்து விட்டதாகவும் முருங்கை விவாசியிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் செலவிடப்பணம் கூட திரும்ப கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: