காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துங்கள்: அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை

மதுரை: காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துங்கள் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பனைவயல் கிராமத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிடக் கோரி கலைராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டனர்.

மேலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்; காலி மதுபாட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் வெற்றிகரமான திட்டமாகும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மலை பகுதிகளில் மட்டும் அமல்படுத்தினால் போதுமா? மலைப் பகுதிகளில் காலி மதுபாட்டில்களை தூக்கி எறிவதால் பாதிப்பு எனில் சமவெளி பகுதிகளில் போடுவதால் பாதிப்பு இல்லையா? எத்தனை மாவட்டங்களில் சோதனை முறையில் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது? மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், ராமநாதபுரத்தில் நடைமுறைப்படுத்தவில்லையா? தமிழ்நாடு முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்துவீர்கள்? திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங்களாகியும் இன்னும் சோதனை முறை எனக் கூறுவது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்; மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துங்கள் என அரசுக்கு ஆலோசனை வழங்கினர்.

The post காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துங்கள்: அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: