தேர்தல் தோல்விக்கு குலும், அகிலேஷ் யாதவும் இவிஎம் மீது குற்றம்சாட்டுவர்: அமித் ஷா சொல்கிறார்


மகராஜ்கஞ்ச்: ‘மக்களவை தேர்தலில் தங்களின் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) மீது ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் குற்றம்சாட்ட முடிவு செய்துள்ளனர்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டல் செய்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் தொகுதியில் நேற்று பிரசாரம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. அன்று மதியம் 2 மணிக்கு ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தி, இவிஎம் இயந்திர மோசடியால் தான் நாங்கள் தேர்தலில் தோற்றோம் என்று கூறுவார்கள். நடந்து முடிந்த முதல் 5 சுற்று தேர்தலிலேயே ஆட்சி அமைக்க போதுமான 310 இடங்களை பாஜ தாண்டிவிட்டது. ராகுலுக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது.

அகிலேஷுக்கு வெறும் 4 இடங்களில் வெற்றி பெறுவார். எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யாருமில்லை. 5 ஆண்டுகளில் அவர்களில் 5 பிரதமர்கள் பதவியேற்பார்கள். இந்தியா என்ன பொது அங்காடியா? 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் இப்படிப்பட்ட பிரதமர்களால் வேலை செய்ய முடியுமா? இவ்வாறு அமித்ஷா பேசி உள்ளார். பின்னர் தியோரியாவில் நடந்த பிரசாரத்தில் பேசிய அமித்ஷா, ‘‘இத்தேர்தல் ராமர் கோயில் கட்டியவர்களுக்கும், ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு இடையேயான தேர்தல்’’ என்றார். கடந்த 1990ல் உபி முதல்வராக முலாயம் சிங் இருந்த போது, கர சேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

The post தேர்தல் தோல்விக்கு குலும், அகிலேஷ் யாதவும் இவிஎம் மீது குற்றம்சாட்டுவர்: அமித் ஷா சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: