மகாராஷ்டிரா அரசில் இணைந்த அமைச்சர் ஏக்நாத் காட்சே மருமகனுக்கு ஜாமீன்: 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்தார்

 

மும்பை: மகாராஷ்டிரா அரசில் இணைந்து வருவாய்த்துறை அமைச்சராக பதவி ஏற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் காட்சே மருமகன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் ஏக்நாத் காட்சே. இவர் அஜித்பவார் அணியுடன் இணைந்து இப்போது மகாராஷ்டிரா அமைச்சரவையில் இடம்பெற்று வருவாய்த்துறை அமைச்சராக உள்ளார்.

ஏக்நாத் காட்சே மருமகன் கிரிஷ் சவுத்திரி. இவர் மீது 2016ம் ஆண்டு புனே நகரில் நடந்த ஒரு நில விற்பனை தொடர்பான வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 2021 ஜூலை 7ம் தேதி கைது செய்தது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் சிறையில் இருக்கும் கிரிஷ் சவுத்திரிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 21ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவா் நேற்று மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

The post மகாராஷ்டிரா அரசில் இணைந்த அமைச்சர் ஏக்நாத் காட்சே மருமகனுக்கு ஜாமீன்: 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்தார் appeared first on Dinakaran.

Related Stories: