எடிட் செய்த புகைப்படத்தால் குழப்பம் மன்னிப்பு கேட்டார் இளவரசி கேட் மிடில்டன்

லண்டன்: இங்கிலாந்தில் அன்னையர் தினமாக கொண்டாடப்படும் கடந்த 10ம் தேதி தனது 3 குழந்தைகளான இளவரசர்கள் ஜார்ஜ் (10), லூயிஸ் (5), இளவரசி சார்லோட் (8) ஆகியோருடன் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சிரித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டது. இதில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் இல்லாததும், கேட் மிடில்டன் விரலில் திருமண மோதிரம் இல்லாததும் பல குழப்பங்களை ஏற்படுத்தியது. வில்லியம், மிடில்டன் பிரிந்து விட்டதாகவும் சிலர் புரளி கிளப்பத் தொடங்கினர். இந்த குழப்பத்தை தொடர்ந்து, அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என கேட் மிடில்டன் அறிவித்தார். இதுதொடர்பாக மிடில்டன் டிவிட்டரில், ‘‘பல அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களைப் போல நானும் எடிட்டிங் செய்து பார்த்தேன். அந்த புகைப்படம் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறி உள்ளார்.

The post எடிட் செய்த புகைப்படத்தால் குழப்பம் மன்னிப்பு கேட்டார் இளவரசி கேட் மிடில்டன் appeared first on Dinakaran.

Related Stories: