ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தெலங்கானா கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருட்டு: சிசிடிவி கேமராக்கள் உடைத்து ரெக்கார்டிங் அழிப்பு அதிகாரிகள் போலீசில் புகார்

திருமலை: தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கால்நடை பராமரிப்பு அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு நடந்த தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சி இருமுறை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலிலும் பிஆர்எஸ் கட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நிலைமாறி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த் பதவியேற்றார்.

இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியின் முன்னாள் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தலசானி சீனிவாசயாதவின் சிறப்பு அதிகாரியாக கல்யாண் என்பவர் பணியாற்றி வந்தார். தற்போது இவரது அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருட்டுபோனதை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டிருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய மண்டல டிஜிபி நிவாஸிடம் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், துறை இயக்குனரிடம் காவல்துறை துணை ஆணையர் விசாரணை நடத்தினார். அதில், ஆவணங்கள் காணாமல் போனது குறித்து தங்களிடம் எந்த தகவலும் இல்லை என இயக்குநர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து டிஜிபி கூறுகையில், ‘கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது. சில கோப்புகள் கிழிந்துள்ளது. சிசிடிவி கேமராக்களும் உடைத்து ரெக்கார்டிங் அழிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரி கல்யாண், எலிசா, மோகன், வெங்கடேஷ், பிரசாந்த் ஆகியோர் மீது ஆவணங்கள் திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது’ என கூறினார். இதேபோல் பஷீர்பாக்கில் உள்ள ஆர்ஜேடி கட்டிடத்தில் உள்ள முன்னாள் கல்வி அமைச்சர் சபிதா இந்திரா, னிவாஸ் கவுட் அலுவலகத்தின் பூட்டை உடைத்து பர்னிச்சர்கள், கோப்புகளை அடையாளம் தெரியாத சிலர் எடுத்து செல்ல முயன்றனர். ​​இதனை கண்டதும் அப்பகுதி அவர்கள் தடுத்து நிறுத்தி ேகள்வி எழுப்பியதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினார்கள்.

The post ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தெலங்கானா கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருட்டு: சிசிடிவி கேமராக்கள் உடைத்து ரெக்கார்டிங் அழிப்பு அதிகாரிகள் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: