சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர்; சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். இது உறுதிமொழி மட்டுமல்ல; வழிகாட்டும் நெறிமுறை. இது திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது. இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாக பாழ்படுத்தியது பாஜக அரசு.
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. தனது கையில் கிடைத்த அதிகாரத்தை பா.ஜ.க. அரசு வீணடித்துவிட்டது. இந்தியாவின் கட்டமைப்புகள் அனைத்தையும் சிறுகச் சிறுக சிதைத்துவிட்டது பாஜக. இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கபப்ட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கான வளர்ச்சித்திட்டங்களும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்;
மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.
உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும்
ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 361 பிரிவு நீக்கப்படும்
புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்
ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஒன்றிய அரசு தேர்வுகள் நடத்தப்படும்
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்
நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உடனே அமல்படுத்தப்படும்
காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் விரிவாக்கப்படும்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்
மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
பாஜக அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500-க்கு வழங்கப்படும்; பெட்ரோல் விலை ரூ.75-ஆக குறைக்கப்படும்.
ஒரு லிட்டர் டீசல் ரூ.65-க்கு விற்கப்படும்.
நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்
வட்டியில்லா கல்விக்கடனாக மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும்
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்
ஜிஎஸ்டி சட்டங்கள் திருத்தப்படும்
குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்
வேளாண் விளை பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவு, +50% லாபம் என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்
மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்
மாநில முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்
100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்படும்
தமிழ்நாட்டில் புதிதாக ஐஐடி, ஐஐஎம் அமைக்கப்படும்
ரயில்வே பயணத்தில் பாஜக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட சலுகைகள் அனைத்தும் மீண்டும் வழங்கப்படும். திமுகவை பொறுத்தவரை சொன்னதை செய்வோம்; சொல்வதைத் தான் செய்வோம் இவ்வாறு கூறினார்.
The post சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.. ஆளுநரின் அதிகாரம் குறைப்பு.. சிலிண்டர் ரூ.500, பெட்ரோல் ரூ.75-க்கு விற்கப்படும்.. நீட் விலக்கு: திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்புகள் appeared first on Dinakaran.