தீபாவளியன்று 2 மணி நேரம் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க காவல்துறை அறிவுரை..!!

சென்னை: தீபாவளியன்று காலை 6-7 வரையும், இரவு 7-8 மணி வரையும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுபடி பட்டாசு வெடிக்கும்நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. குடிசைப் பகுதிகள், மாடிக் கட்டடங்கள் அருகே ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிக்க நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்க வேண்டும். மேலும், பட்டாசுகளால் விபத்து நேர்ந்தால் 100, 101, 108, 112 ஆகிய எண்களை உடனே அழைக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

The post தீபாவளியன்று 2 மணி நேரம் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க காவல்துறை அறிவுரை..!! appeared first on Dinakaran.

Related Stories: