டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் அகர்வால் தெரிவித்தார். அவர்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சியினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் இருப்பது, தண்ணீர் நிரம்பிய தொட்டிகள், தொட்டிகளை மூடி வைப்பது, குளிரூட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வதும், முழுக்கை ஆடைகளை அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
கடந்த 30 நாள்களில், நகரத்தில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 3 புதிய டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. டெங்குவுக்கு ஒருவர் பலியாகியுள்ளனர். கோமதி நகர், இந்திராநகர் மற்றும் அலிகஞ்ச் போன்ற பகுதிகளில் அதிகமாகப் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் உத்தரப் பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700ஐ தாண்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் வரை இந்நிலை தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700-ஐ தாண்டியதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல்! appeared first on Dinakaran.