டெல்லி விரைந்தார் குமாரசாமி அமித்ஷா, நட்டாவுடன் இன்று கூட்டணி பேச்சு

பெங்களூரு: மக்களவை தேர்தலில் பாஜ – மஜத கூட்டணி குறித்து பாஜ மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக மஜத தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி டெல்லி சென்றுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.டி.குமாரசாமி, டெல்லியில் கூட்டணி குறித்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டணி மற்றும் மற்ற விஷயங்கள் உறுதி செய்யப்பட்டால், டெல்லியில் செய்தியாளர்களிடம் முழு விவரத்தையும் கூறுகிறேன். இதுவரை பாஜ – மஜத இடையே தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.

பாஜ மேலிட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவின் 28 மக்களவை தொகுதிகளிலும் உள்ள கள நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படும். 2023 சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய நிலவரம் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். டெல்லியில் பாஜ மேலிட தலைவர்களான அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசவிருக்கிறேன். கூட்டணி இன்றே உறுதியாகிறதா என்று பார்ப்போம். தேவைப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடியை எச்.டி.தேவகவுடா சந்தித்து பேசுவார் என்றார்.

The post டெல்லி விரைந்தார் குமாரசாமி அமித்ஷா, நட்டாவுடன் இன்று கூட்டணி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: