இதுகுறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘சில தினங்களுக்கு முன்னதாக டெல்லியில் பேருந்து பயணத்தின் போது தனக்கு இனிமையான அனுபவம் கிடைத்தது. அப்போது அரசு பேருந்து ஊழியர்களுடன் அவர்களின் அன்றாட வழக்கங்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக உரையாடினேன். இதையடுத்து அவர்கள் சமூகப் பாதுகாப்பு இல்லை. நிலையான வருமானம் இல்லை. நிரந்தர வேலை இல்லை என பல குறைகளை ஊழியர்கள் அடுக்கடுக்காக என்னுடம் எடுத்துரைத்தனர். அதனை கேட்ட தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நிச்சயமற்ற இருளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் உள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பிற்காக தொடர்ச்சியாக நியமிக்கப்பட்ட ஊர்க்காவல் படையினர் கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் இல்லாமல் உள்ளனர் போன்ற விஷயங்கள் மிகவும் வேதனையாக இருந்தது. இதுபோன்ற நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களைப் போலவே, டெல்லி அரசு பேருந்து ஊழியர்களும் அச்சத்தில் வாழ்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தான் இந்தியாவை இயக்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான பயணிகளின் பயணத்தை எளிதாக்குகிறார்கள். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்புக்கு ஈடாக அவர்களுக்கு அநீதி மட்டுமே கிடைத்துள்ளது. சம வேலை, சம ஊதியம், முழுமையான நீதி போன்ற அவர்களது கோரிக்கைகள் தெளிவானவை ஆகும். எனவே அரசுகள் இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
The post டெல்லி அரசு பேருந்து ஊழியர்கள் இருள் வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்: ராகுல் காந்தி கடும் வேதனை appeared first on Dinakaran.