×

‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்!

டெல்லி: பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்! appeared first on Dinakaran.

Tags : Gautam Kambir ,Kashmir ,Delhi ,J. K. ,Former M. ,Rajinder Nagar police station ,I. S. ,S. I. S. ,Dinakaran ,
× RELATED 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்:...