×

100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்: காந்தியின் பெயரை நீக்குவதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

டெல்லி: விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்ட மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. வேலை நாட்கள் அதிகரிக்கப்படும் அதே நேரத்தில் திட்டத்துக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 நாள் வேலை திட்டத்துக்கு 90 சதவீத நிதியை வழங்கி வந்த ஒன்றிய அரசு, இனி 60% நிதியை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 40 சதவீத நிதியை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் நிதிச்சுமை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஒன்றிய அரசு நிதிச்சுமையை குறைப்பதுடன் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரும் நீக்கப்படுவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவது காந்தியின் பெயரை அழிக்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பெயரை மாற்றும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு விக்சித் பாரத், ஜி ராம் ஜி என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Congress ,Gandhi ,Delhi ,Union Cabinet ,
× RELATED விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்ட மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்