உம்மன்சாண்டி தொகுதி உள்பட 7 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.5ல் இடைத்தேர்தல்

புதுடெல்லி: கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி சமீபத்தில் காலமானார். இதனால் 50 ஆண்டுகளாக அவர் வெற்றி பெற்று வந்த புதுப்பள்ளி தொகுதி காலியானது. இதே போல் நாடு முழுவதும் மேலும் 6 தொகுதிகள் காலியாக உள்ளன. திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்குவங்காளம், உத்தரகாண்ட், உபி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி காலியாக இருந்தன.

இந்த காலி இடங்களில் செப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடை பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. செப்.8ம் தேதி இங்கு வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் போட்டியிடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதை அறிவித்துள்ளார்.

The post உம்மன்சாண்டி தொகுதி உள்பட 7 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.5ல் இடைத்தேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: