ராகுல் காந்தி 54வது பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை மத்திய மாவட்டத்தில் 14 இடங்களில் காங்கிரஸ் கொடி: மாவட்ட தலைவர் முத்தழகன் ஏற்பாட்டில், கே.எஸ்.அழகிரி ஏற்றினார்

சென்னை: தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் மார்கெட் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக, கொட்டும் மழையில் சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர் முத்துரங்கம் சாலை, வடபழனி, கோயம்பேடு, சாலிகிராமம், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட 14 இடங்களில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, அதில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், ஜெயக்குமார் எம்பி., சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாநில பொதுச் செயலாளர்கள் இல.பாஸ்கரன், சிரஞ்சீவி, எஸ்.ஏ.வாசு, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன் குமார், மாவட்ட பொருளாளர் ஏ.எஸ்.ஜார்ஜ், நிர்வாகிகள் சுசீலா கோபாலகிருஷ்ணன், சைதை செல்லக்குமார், ஆர்.சம்பத், யுகேந்திரன், செல்வேந்தன், ஜாண் ஆபிரகாம், கர்ணன், ராமதாஸ், கருப்பையா, ஏ.வி.எம்.ஷெரீப், மன்சூர் அலி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனசேகரன், ரா‌ஜ ராஜேஸ்வரி, மகிளா காங்கிரஸ் தலைவி உமா, பக்கிரிசாமி, பகுதி தலைவர்கள் ராஜபாண்டி,

குடந்தை ராஜமாணிக்கம், வடபழனி பாபு, ஏழுமலை, முத்தமிழ், மன்னன், கோகுலகிருஷ்ணன், கிண்டி கணேஷ் மற்றும் கலைப் பிரிவு தலைவர் சந்திரசேகர், முகமது யூசுப், ரங்கநாதன், வில்லியம்ஸ், சைதை முத்தமிழ், தமிழரசன், விருகை ராம்குமார், எம்.சீனிவாசன், அரவிந்தன், பால் சரவணன், பால்ராஜ், பால முருகன், இந்திரா, முருகானந்தம், ராஜ்குமார், கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், காமாட்சி, லோகநாதன், ஆர்.கே.பாலாஜி, ஜெயா கிருஷ்ணமூர்த்தி, தட்சணாமூர்த்தி, ராம்குமார், இல.பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராகுல் காந்தி 54வது பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை மத்திய மாவட்டத்தில் 14 இடங்களில் காங்கிரஸ் கொடி: மாவட்ட தலைவர் முத்தழகன் ஏற்பாட்டில், கே.எஸ்.அழகிரி ஏற்றினார் appeared first on Dinakaran.

Related Stories: