×

காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகம் மீதான ஆழமான தாக்குதல்.: மல்லிகார்ஜுன கார்கே காட்டம்

டெல்லி : காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. 45 நாட்கள் தாமதமாக கணக்கு காட்டியதற்காக ரூ.210 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை அதிர்ச்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொது தேர்தல் சமயத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது கட்சியின் வங்கி கணக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகமே முடங்கி உள்ளது. இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பழம்பெரும் கட்சியான காங்கிரசை வேண்மென்றே குறி வைத்து இந்த நடவடிக்கையை வருமான வரித்துறை எடுத்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.இதனால் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், தனது பதவி போதையில் ஒன்றிய பாஜக அரசு முடக்கியுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஆழமான தாக்குதல்.அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக பாஜக வசூலித்த பணத்தை அவர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள், ஆனால், நாங்கள் Crowd Funding முறையில் திரட்டிய பணத்திற்கு சீல் வைத்துள்ளார்கள்.இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் எதிர்காலத்தில் தேர்தலே நடைபெறாது என கூறினேன்.நாட்டில் உள்ள பல கட்சி முறையை நீதித்துறை காப்பாற்ற வேண்டும். இந்த சர்வாதிகாரத்திற்கும், அநீதிக்கும் எதிராக வீதிகளில் இறங்கி போராடுவோம்.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகம் மீதான ஆழமான தாக்குதல்.: மல்லிகார்ஜுன கார்கே காட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Mallikarjuna Karke Kattam ,Delhi ,President ,Mallikarjuna Kharge ,Congress party ,Dinakaran ,
× RELATED மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தனர்