இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது இத்ரீஸ், தாஹா நசீர் ஆகிய 2 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் சென்னை புழல் சிறையில் இருந்து கோவை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 2 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை.! appeared first on Dinakaran.