2.5 கிமீ இடைவெளியில் வித்தியாசமான பருவநிலை: கருமண்டபத்தில் ‘வெயில்’ பிராட்டியூரில் ‘மழை’

திருச்சி: தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்தது. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வரும் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பலத்த மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே கடந்த 2 நாட்களாக திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் காலை 7 மணி வரை பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று பகல் 12 மணியளவில் ராம்ஜிநகர், பிராட்டியூர், கள்ளிக்குடி, புங்கனூர் பகுதிகளில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் பலத்த காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

இந்த மழை அரை மணி நேரத்துக்கும் ேமலாக நீடித்தது. ஆனால் அருகில் உள்ள கருமண்டபம் மற்றும் மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், பொன்னகர் பகுதிகளில் மழை பொழியவில்லை. மாறாக வெயில் அடித்தது. பிராட்டியூரில் மழை பெய்ததும், 2.5 கிமீ தொலைவில் உள்ள கருமண்டபத்தில் மழை பொழியாததும் மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

The post 2.5 கிமீ இடைவெளியில் வித்தியாசமான பருவநிலை: கருமண்டபத்தில் ‘வெயில்’ பிராட்டியூரில் ‘மழை’ appeared first on Dinakaran.

Related Stories: