The post வகுப்பு எடுக்க தனக்கு பதில் மனைவியை அனுப்பிய ஆசிரியர்: பெற்றோர்கள் போராட்டம் appeared first on Dinakaran.
வகுப்பு எடுக்க தனக்கு பதில் மனைவியை அனுப்பிய ஆசிரியர்: பெற்றோர்கள் போராட்டம்

தாவணகெரே: கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், சன்னகிரி தாலுகா மாதேனஹள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு எச்.எஸ்.பிரகாஷ் என்பவர், ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ள பிரகாஷ், வாரத்தில் ஒரிரு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி, உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி, அவரது மனைவியை, அவருக்கு பதிலாக பள்ளியில் மாணவர்களுக்குகு பாடம் நடத்த அனுப்பியுள்ளார். இந்நிலையில், பள்ளி ஆசிரியரின் நடவடிக்கையை கண்டித்து, மாணவர்களின் பெற்றோர்கள், நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.