நாரா லோகேஷின் பாதயாத்திரையில் தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் கட்சியினர் இடையே மோதல்: போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்

திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷின் பாதயாத்திரையில் தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் ‘யுவகலம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரின் 194வது பாதயாத்திரை ஏலூர் மாவட்டம் நுஜிவீடு மண்டலம் துக்குளூரில் நடைபயணத்தின்போது ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அங்கு கட்சி கொடியுடன் வந்து கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஆளும் கட்சி தொண்டர்கள் சண்டையை தூண்டி விடும் செயலை தடுக்காமல் போலீசார் இருந்ததால் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் மறு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதன்பின், இருக்கட்சியினரையும் கலைத்து லோகேஷ் பேரணி முன்னோக்கி செல்ல ஏற்பாடு செய்தனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமென்றே வன்முறை சம்பவத்தை அரங்கேற்ற முயற்சி செய்து வருவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

The post நாரா லோகேஷின் பாதயாத்திரையில் தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் கட்சியினர் இடையே மோதல்: போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: