செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் (ம) புதிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாசாரம், புதிய கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் சிறப்பான சாதனை புரிந்துள்ள தனிதகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக ‘பிரதமர் மந்திரி தேசிய குழந்தைகள் விருது’ என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். இவ்விருதுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அமைச்சகத்தின் https://awards.gov.in/ என்னும் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட தகுதியுடைய குழந்தைகள், இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் 31.8.2023 ஆகும்.

The post செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: