செர்ரி கேக்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு 500 கிராம்
ஐசிங் சுகர் 500 கிராம்
பட்டர் 500 கிராம்
பேக்கிங் சோடா பவுடர் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
முட்டை 10
கிஸ்மிஸ் 100 கிராம்
செர்ரி பழம் 100 கிராம்
ஆரஞ்சு பழத்தோல் 10 கிராம்
முந்திரிப்பருப்பு 100 கிராம்

செய்முறை:

செர்ரி கேக் செய்வதற்கு முதலில் மைதா, பேக்கிங் சோடா பவுடர், உப்பு ஆகியவற்றை சலித்து வைத்துக் கொள்ளவும். பிறகு முட்டைகளை உடைத்து வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள்கரு ஆகியவற்றை தனித்தனியாக அடித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் பட்டர், ஐசிங் சுகர், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பிறகு கிஸ்மிஸ், செர்ரி பழம், ஆரஞ்சு பழத்தோல், முந்திரி ஆகியவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் சர்க்கரைக் கலவையில் சிறிது சிறிதாக மாவையும், வெள்ளைக்கருவையும் சேர்த்து நன்கு கலக்கிக்கொண்டே இருக்கவும். நறுக்கி வைத்துள்ள முந்திரி, கிஸ்மிஸ், ஆரஞ்சு பழ தோல், செர்ரி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு கேக் ட்ரேயில் சிறிது பட்டரைத் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி ஓவனில் மிதமான வெப்பநிலையில் 45 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். சூப்பரான செர்ரி கேக் ரெடி.

The post செர்ரி கேக் appeared first on Dinakaran.