சென்னை: சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே டிச.22 மற்றும் 24ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டிச.22, 24-ல் எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரயில்:
* சென்னை எழும்பூர்-கொல்லம் (06127) இடையே டிச.22 மற்றும் 24-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்.
* சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் மாலை 4.30க்கு கொல்லம் செல்லும்.
* மறுமார்க்கத்தில் கொல்லம்-எழும்பூர்(06128) இடையே டிச.23 மற்றும் 25-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கம்.
* கொல்லத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் நண்பகல் 12 மணிக்கு எழும்பூர் செல்லும்.
* சிறப்பு ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் நின்று செல்லும்.
* பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களிலும் சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செந்தூர்-எழும்பூர் ரயில்நாளை நெல்லையில் புறப்படும்:
* திருச்செந்தூர்-எழும்பூர் (20606) ரயில் நாளை நெல்லையிலிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும்.
* திருச்செந்தூர் பகுதியில் ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி ரயில் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செந்தூர்-பாலக்காடு ரயில்நாளை நெல்லையில் புறப்படும்:
* திருச்செந்தூர்-பாலக்காடு (16732) ரயில் நாளை நெல்லையிலிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும்.
எழும்பூர்-செந்தூர் ரயில் நாளை நெல்லை வரை இயக்கம்:
* எழும்பூர்-திருச்செந்தூர் (20605) ரயில் நாளை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாலக்காடு-செந்தூர் ரயில் நாளை நெல்லை வரை இயக்கம்:
* பாலக்காடு-திருச்செந்தூர் (16731) ரயில் நாளை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே டிச.22 மற்றும் 24ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.