சென்னை: சென்னையில் தனியார் கழிவுநீர் லாரி இயக்குவோர் மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. யாரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக் கூடாது எனவும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி பணியாளர் இறக்க நேரிட்டால் ரூ.15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திறந்தவெளி, நீர்நிலைகளில் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றக் கூடாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
The post சென்னையில் தனியார் கழிவுநீர் லாரி இயக்குவோர் மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது: மாநகராட்சி appeared first on Dinakaran.