எட்டாக்கனியாக மாறும் தங்க நகைகள்!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,680க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,710க்கும், சவரன் ரூ.45,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.82.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை எப்போதும் சிறப்பாக இருக்கும். இதனிடையே, நகை விலை தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்கு குறைவதும், அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வதுமாகவும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி சவரன் தங்கம் ரூ.44,920க்கு விற்கப்பட்டது. 3ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக ஒரு சவரன் ரூ.45,648க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நகை விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து 1 சவரன் ரூ.46,000 ஆகவும் விற்பனையானது.

தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. பின்னர் ஏற்றமும், இறக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (மே 8)ம் தேதி திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. வார தொடக்கத்திலேயே தங்கம் விலை உயர்ந்திருப்பது நகை பிரியர்களை சற்று கலக்கமடைய செய்துள்ளது.

The post எட்டாக்கனியாக மாறும் தங்க நகைகள்!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,680க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: