அதன்படி, சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ1,809.50-க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. தொடர்ந்து 4வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரம் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.
The post சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை: வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை appeared first on Dinakaran.