சென்னை- தூத்துக்குடி விமானம் திடீர் கோளாறு

தூத்துக்குடி: தூத்துக்குடி – சென்னை இடையே தினமும் 3 விமான சேவையும், தூத்துக்குடி – பெங்களூரு இடையே தினமும் ஒரு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு புறப்பட்டு 11.55 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேர வேண்டிய விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக மதியம் 2.30க்கு தூத்துக்குடி வந்தடைந்தது. இதனால் இந்த விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதன் காரணமாக, மதியம் 2.05 மணிக்கு வந்து சேர வேண்டிய பெங்களூரு – தூத்துக்குடி விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது.

The post சென்னை- தூத்துக்குடி விமானம் திடீர் கோளாறு appeared first on Dinakaran.

Related Stories: